தேர்தலில் வெல்லப்போவது ஜேவிபியே..! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல் என்கிறார் பிமல்
Anura Dissanayake
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan political crisis
By pavan
இந்த ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர்த் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரே வெற்றியீட்டுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கடந்த நவம்பர் மாதமளவில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவிற்கு 50 வீத மக்களின் ஆதரவு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைமை
அரசியல் தலைமையில் மாற்றத்தைக் கொண்டு வராமல் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
தமது கட்சியின் செயற்பாடுகள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நன்மதிப்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், மக்கள் விரோத சக்திகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி சேரப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி