தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக சிறிலங்கா இராணுவத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்! விளக்கமளித்த ரணில்
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது. அதற்காக பாரியளவில் செலவும் செய்யப்பட்டது. அந்த போர் முடிவுக்கு வந்ததால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இராணுவத்தினரை மறுநாளே வெளியேற்ற முடியாது என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை குறித்தும், நாட்டின் எதிர்காலம் குறித்தும் அண்மையில் இளைஞர்களுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், பாதுகாப்பு அமைச்சகம் என்பது இராணுவம் மட்டுமல்ல. இடர்முகாமைத்துவம் உள்ளிட்ட பல பகுதிகள் இதில் அடங்கும். அதற்கான செலவுகளும் உள்ளன.
எனவே, இராணுவச் செலவை, ஏனைய விடயங்களைப் போல, 24 மணி நேரத்தில் மாற்ற முடியாது. நமது இராணுவம், பணியாளர்களுக்காக அதிக பணத்தை செலவிடுகிறது. அவற்றை ஒரேயடியாக 40,000ஆக 50,000 ஆகக் குறைக்க முடியாது
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்