சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்! சந்திரிக்கா தலைமையில் புதிய கூட்டணி
சிறிலங்கா சுதந்திர கட்சியை முதன்மையாக கொண்டு புதிய அரசியல் கூட்டணியொன்று அமைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கூட்டணியின் தலைவராக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த பொறுப்பை ஏற்க அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுதந்திர கட்சியை முதன்மையாக கொண்டு புதியதொரு கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஏனைய அரசியல் கட்சிகள்
அத்துடன், இந்த கூட்டணியில் சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மாத்திரமின்றி ஏனைய அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணியில், சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அதே அதிகாரம் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் சில உறுப்பினர்களும் இந்த கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதிய கூட்டணி
மேலும், இந்த கூட்டணியின் சின்னத்தை தெரிவு செய்வது தொடர்பான பேச்சுக்கள் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, குறித்த கூட்டணியின் அங்குரார்ப்பண கூட்டத்தை கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதான அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டணியும், சுதந்திர கட்சியால் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |