ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி தீர்மானம்..!
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8,000லிருந்து 4,000 ஆக குறைக்கவும், அடுத்த தேர்தலுக்கு முன்னர் மக்கள் சபை திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் உத்தேசித்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிபர் ஊடகப் பிரிவு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.
அரசியல் ஊழலுக்கு முக்கிய காரணம் விருப்பு வாக்கு முறை
அரசியல் ஊழலுக்கு முக்கிய காரணம் விருப்பு வாக்கு முறை என சுட்டிக்காட்டிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, விருப்புரிமையற்ற பட்டியல் முறை அல்லது கலப்பு தேர்தல் முறைமையை உடனடியாகக் நிறைவேற்றி தேர்தல் சட்டத்தின் மூலம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பிரதேச சபைகளின் நிறைவேற்று அதிகாரம் ஒரு தலைவருக்கு பதிலாக தலைவர் அடிப்படையில் குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்த திருத்தங்களை உள்ளடக்கி சட்ட வரைவு தயாரிக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
