இலங்கையின் தேசிய வறுமை மட்டம் வெளியீடு; இலங்கை சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்!
இலங்கையினுடைய தேசிய வறுமை மட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் குறித்த தேசிய வறுமை மட்டத்தை அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஒக்டோபர் மாதத்திற்கான தேசிய வறுமை மட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
தனி நபர் செலவு
குறித்த தரவுகளின் படி, இலங்கையில் உள்ள தனிநபர் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு தேவைப்படும் தொகை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், குறைந்தபட்சம் ஒரு தனி நபருக்கு மாதாந்தம் 13,810 ரூபா தேவையாக உள்ளது.
மாவட்ட ரீதியான கணக்கெடுப்பு
மாவட்ட ரீதியாகவும் குறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தவகையில் மாவட்ட ரீதியில், கொழும்பு மாவட்டத்தில் உள்ள தனி நபர் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 14,894 ரூபா தேவையாக உள்ளது.
மொனராகலை மாவட்டம் மிகக் குறைந்த செலவுடன் உள்ளது, மொனராகலை மாவட்டத்தில் உள்ள தனி நபர் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 13,204 ரூபா செலவாகிறது.
காரணம்
இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மதிப்பீடானது இலங்கையின் வறுமை மட்ட அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என இலங்கையின் சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.