பெருந்தோட்ட மக்களுக்கான நற்செய்தி: கிழக்கு ஆளுநரின் கோரிக்கையை ஏற்றுள்ள ஜனாதிபதி

Sri Lanka Upcountry People Ranil Wickremesinghe Sri Lankan Peoples Senthil Thondaman
By Dilakshan Jul 21, 2024 12:15 AM GMT
Report

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை தற்காலிக தீர்வாக இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 5000 ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டுமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe)கோரிக்கை முன்வைத்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பளம் நீதிமன்ற தலையீட்டால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட் தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் ஏனைய சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் பெருந்தோட்ட மக்கள்அரச அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு


இடைக்கால கொடுப்பனவு

அவர்கள் வேலைக்கு செல்வதாகவும், அவர்களுக்கான ஊழியர் சேமலாபநிதி வழங்கப்படுவதாலும் அவர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க முடியாது எனவும் அரச அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

பெருந்தோட்ட மக்களுக்கான நற்செய்தி: கிழக்கு ஆளுநரின் கோரிக்கையை ஏற்றுள்ள ஜனாதிபதி | Sri Lanka President Accepted Senthil S Request

இந்நிலையில் அப்போதைய பிரதமரின் இணைப்பு செயலாளராக இருந்த செந்தில் தொண்டமான், இப்பிரச்சினை குறித்து அப்போதைய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று, 5000 வழங்குவதற்கான நியாயமான அரச ஆவணங்களை பிரதமரிடம் சமர்ப்பித்து, இந்த நிவாரண தொகையை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க ஜனாதிபதியின் செயலாளர், திறைசேரி செயலாளர் ஆகியோருடன் பல முறை கலந்துரையாடி மலையகம் முழுவதும் குறித்த தொகையை இடைக்கால நிவாரணமாக பெற்றுக்கொடுத்திருந்தார்.

ஜனாதிபதி பணிப்புரை

தற்போது 1700 ரூபாய் சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபாய் வழங்க மாவட்டம் வாரியாக தொழிலாளர்களின் பட்டியல், நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை, தற்காலிக தொழிலாளர்களின் எண்ணிக்கை போன்ற ஆவணங்களை செந்தில் தொண்டமான் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.


இதற்கமைய செந்தில் தொண்டமானின் கோரிக்கையை விரைவாக ஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும் 1700 சம்பளத்தை பெறுவதற்கு தற்போது உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து ஜனாதிபதியிடம் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்ததுடன், மாற்று வழிகள் குறித்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026