கோட்டாபயவின் நிறைவேற்று அதிகாரத்துடனான பயணத்தின் இரண்டாவது ஆண்டு!
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது அரச தலைவராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரச தலைவர் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 2019 ஆம் ஆண்டு களமிறக்கப்பட்டிருந்தார்.
அந்நிலையில், 2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் தனிச் சிங்கள வாக்குகளால் அமோக வெற்றியும் பெற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் 18ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த தினத்தில் அநுராதபுரத்தில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேர்தலில் அவர் 52.25 சதவீத வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் தனது அமோக வெற்றி தொடர்பிலும் தனிச் சிங்கள வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியமை தொடர்பிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மார் தட்டி பெருமிதம் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.