தேர்தல் இன்றி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் திரைமறைவுத் திட்டத்தில் பசில்- பங்காளிகளின் பிளவால் அம்பலம்!

basil sri lanka mahinda government wimal weerawansa interview gotabaya
By Kalaimathy Mar 17, 2022 05:36 AM GMT
Report

அரச தலைவர் தேர்தலை நடத்தாது சிறிலங்காவின் அரச தலைவராக பதவிக்கு வர பசில் ராஜபக்சவும் அவருக்கு நெருக்கமான தரப்பினரும் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்டும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

“நாட்டில் நிலவும் நெருக்கடியை உச்சமடைய செய்யும் ஒரு சந்தர்ப்பத்தில் அதனை தாங்க முடியாது கோட்டாபய ராஜபக்ச அரச தலைவர் பதவியை கைவிடுவார் என நம்புகிறேன். அத்துடன் பிரதமர் தற்போது நல்ல நிலைமையில் இல்லை.

இதனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மக்களின் கருத்தை அறியும் தேர்தலுக்கு செல்லாமல் அரச தலைவராக பதவிக்கு வருவதற்கு பசில் ராஜபக்ச திட்டமிட்டு வருகிறார். கோட்டாபய பதவி விலகினால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் ஒருவர் அரச தலைவராக பதவிக்கு வர முடியும்.

ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பசில் ராஜபக்சவின் ஆதரவாளர்கள். அவர்கள் பசில் ராஜபக்சவையே அரச தலைவராக தெரிவு செய்வார்கள்.

அப்போது பசில் ராஜபக்ச தேர்தல் இன்றி அரச தலைவராக தெரிவு செய்யப்படுவார். இரட்டை குடியுரிமை பெற்றவரிடம் நாட்டின் தலைவர் பதவி செல்லும். அவரிடம் இருக்கும் திட்டம் அதுதான்.

ராஜபக்ச சகோதரர்களுக்கு இது புரிந்தும் புரியாதவர்கள் போல் இருக்கின்றனர். அது சகோதர பாசம். ஏனைய ராஜபக்ச சகோதரர்கள் போன்றவர் அல்ல பசில் ராஜபக்ச. சிறிய வயதில் மகிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்ச நுகேகொட பகுதியில் ஆசிரியர் ஒருவரின் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

அந்த ஆசிரியை மகிந்த ராஜபக்சவை விட பசில் ராஜபக்ச மீது அதிகம் பற்று கொண்டிருந்தார். அந்த ஆசிரியை பசில் ராஜபக்சவின் உணவில் மாத்திரம் முட்டையை வைத்து பரிமாறுவது வழக்கம்.

ஒரு முட்டை இருக்கின்றது, சரியானால், அதனை மற்றைய சகோதரருக்கு பகிர்ந்து கொடுத்திருக்க வேண்டும் எனினும் பசில் ராஜபக்ச என்ற அந்த சகோதரர், சோற்றில் முட்டையை மூடி மறைத்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு அந்த முட்டை கிடைத்து இருந்தால், அதனை பகிர்ந்து தம்பிக்கு கொடுத்து விட்டு சாப்பிட்டிருப்பார். பசில் ராஜபக்ச ஐக்கிய தேசியக் கட்சியில் காமினி திஸாநாயக்கவுடன் இருக்கும் காலத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தலிலும் போட்டியிட்டவர்.

உண்மையான பாசம் உள்ள சகோதரராக இருந்தால், 2015 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், அவருக்கு தெரியாமல் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றிருப்பாரா?.

அப்படியான சகோதருக்காகவே இவர்கள் அனைத்தையும் இழந்து வருகின்றனர்” எனவும் விமல் வீரவன்ச  தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026