ரணிலின் திட்டம் - மகிந்தவின் ஆசை...! என்ன நடக்கிறது சிறிலங்கா அரசியலில்...
இலங்கை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஓர் அத்தியாத்தை எழுதியிருக்கிறது 2022 சிறிலங்காவின் அரசியலில், நவீன துட்ட கைமுனுவாக, வீழ்த்தவே முடியாத ஒருவராக கருத்தப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மக்களால் ஓட ஓட விரட்டப்பட்டிருக்கின்றார்.
யுத்தத்தை வெற்றி கொண்டவர்களாக, இன்னும் 20 ஆண்டுகள் அசைக்க முடியாத அதிகாரத்தில் இருப்பார்கள் என கணிக்கப்பட்ட ராஜபக்ச குடும்பம் அரசியல் பரப்பில் இருந்து தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
இதன் பிண்ணனியில் தாமரை மொட்டுக்குத் தலைமை தாங்கும் யானைக்கும், யானைக்குத் தலைமை தாங்கும் தாமரை மொட்டுக்கும் இடையிலான போட்டியில் யானை ஜெயித்தது.
ஆனால் ரணிலை முன்னிறுத்தியதன் மூலம் ராஜபக்சக்கள் தங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாதுகாத்துக் கொண்டு விட்டார்கள்.
அதன் ஒரு பகுதியாக பாரிய மக்கள் எதிர்ப்பின் மூலம் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த கோட்டாபய, ரணிலின் வருகைக்கு பின் இலங்கைக்கு வருகிறார். அதுமட்டுமல்லாது, அமெரிக்காவினால் விசா நிராகரிக்கப்பட்டவர் இன்று அமெரிக்காவுக்கும் பயணமாகியிருக்கிறார்.
ஆக இலங்கை அரசியில் எதோ நடக்கிறது, மகிந்தவின் ஆசையும் ரணிலின் திட்டமும் தென்னிலங்கை அரசியலை சூடுபிடிக்க வைத்திருக்கிறது.
என்ன நடக்கிறது? எப்படி இருக்கிறது அரசியல் சூழல்
இது பற்றிய பரந்த பார்வையோடு இது சாமானியனின் சாட்சியம்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
