இலங்கைக்கு வருகின்றாரா மூன்றாம் சார்லஸ் மன்னர்...! ரணில் முன்வைத்த கோரிக்கை
Ranil Wickremesinghe
United Kingdom
President of Sri lanka
King Charles III
King Charles Coronation
By Pakirathan
பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் நேற்றையதினம் (06.05.2023) முடி சூடிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய முடி சூட்டு விழாவில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க சார்லஸ் மன்னரை சந்தித்துள்ளதுடன், மீண்டும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு விருப்பம் உள்ளதா என அவரிடம் வினவியுள்ளார்.
மன்னரின் பதில்

அதாவது, மீண்டுமொருமுறை இலங்கை வருகின்றீர்களா நான் உங்களிற்கு அழைப்பு விடுக்கலாமா என அதிபர் ரணில் மன்னர் சார்லஸிடம் கேட்டுள்ளார்.
இதற்கு, மன்னர் மூன்றாம் சார்லஸ், இலங்கை வருவது தொடர்பில் சாதகமான பதிலை அளித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி