சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் தொடர்பில் வெளியானது முக்கிய தீர்மானம்!

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Cabinet President of Sri lanka
By Kalaimathy Jul 30, 2022 05:46 AM GMT
Report

சிறிலங்காவின் தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் ஒரு வருட காலத்திற்கு உறுப்பினர்களுக்குரிய சம்பள அடிப்படையில், பணியாற்றுவார்கள் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி ஆட்சி அமைத்த பின்னர் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு, அமைச்சர்களுக்குரிய சம்பளத்தை வழங்காமல் நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய சம்பளத்தை மாத்திரம் வழங்க சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ கார்

சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் தொடர்பில் வெளியானது முக்கிய தீர்மானம்! | Sri Lanka President Ranil Cabinet Parliament Fuel

இதன் மூலம் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ கார் ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர் பதவிகள் 30 வரை மட்டுப்படுத்தப்படும் என்பதுடன் இராஜாங்க அமைச்சர் பதவிகளை 40 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதுடன், சிறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்க ரணில் தீர்மானித்துள்ளார்.

குறைக்கப்படவுள்ள கொடுப்பனவுகள்

சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் தொடர்பில் வெளியானது முக்கிய தீர்மானம்! | Sri Lanka President Ranil Cabinet Parliament Fuel

இதேவேளை, அரசியல் நியமனங்களில் பதவி பெறும் அனைவரினதும் எரிபொருள் கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களின் பணிக்கான உதவித்தொகையை மட்டும் வழங்கவும், மேலதிக கார்கள் வழங்குவதை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நியமனங்களினால் பெருமளவான அரசாங்கப் பணம் விரயமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கார்கள் இதுவரை அந்தந்த அமைச்சுக்களால் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

அமைச்சுக்களுக்கு பணம் கொடுப்பதற்காக ஏலம் விடப்படவுள்ள அரச வாகனங்கள்

சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் தொடர்பில் வெளியானது முக்கிய தீர்மானம்! | Sri Lanka President Ranil Cabinet Parliament Fuel

அத்துடன் ஒவ்வொரு அமைச்சுகளிலும் குவிந்து கிடக்கும் பழைய வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களை ஏலம் விட்டு அந்தந்த அமைச்சுகளுக்கு பணம் பெற்றுக்கொடுக்கவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆகவே அதிக எண்ணிக்கையிலான பயன்படுத்திய வாகனங்களைக் கொண்ட அமைச்சு நிதியமைச்சாகும். மேலும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் அதிபர் அலுவலகத்திலும் இவ்வாறான வாகனங்கள் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026