புதிய விடயங்கள் இல்லாத ரணிலின் கொள்கை விளக்க உரை - தேசிய மக்கள் சக்தி விமர்சனம்!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில், புதிதாக எதுவும் கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அதிபர் உரைக்கு பின்னர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரசியல் வரலாற்றில் இருந்ததையே மீண்டும் இந்த உரையில் முன்வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய விமர்சித்துள்ளார்.
ரணிலின் உரையில் சாதாரண அரசியல் மாற்றங்களே கூறப்பட்டுள்ளது
அத்துடன் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றத்தையே அந்த உரையில் முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்தமையையடுத்து இன்றைய தினம் ஒன்பதாவது நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடர் இடம்பெற்றது.
அதில் ரணில் சிம்மாசன உரையாற்றியிருந்தார். அதன் போது நாட்டின் முன்னேற்றம், இந்தியாவுடனான நல்லுறவு மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பான பலதரப்பட்ட விடயங்களை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
