ஆறு வாரத்திற்குள் ஏற்படவுள்ள மாற்றம் - நாட்டில் மேலும் அதிகமாகவுள்ள போராட்டங்கள் ரணில் விடுத்த எச்சரிக்கை!
இலங்கையில் ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கான இரண்டு வருட நிவாரண திட்டத்திற்கான நிதியை ஒதுக்கும் வகையில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஊடாக உட்கட்டமைப்பு திட்டங்கள் குறைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் கடினமான நாட்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் எனவும் மக்கள் போராட்டங்கள் அதிகமாகும் எனவும் எச்சரித்துள்ளார். இருப்பினும் மக்கள் துன்பப்படும் போது அது இயற்கையானது எனவும் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, மக்கள் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எனினும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அரசியல் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்காமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகவும் இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஊடாக குறைக்கப்படும் நிதியை மக்களின் நலன்புரி விடயங்களுக்கு செலவிட எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ரூபா வருமானம் இல்லாத நிலைமை இருப்பதாக கூறியுள்ள ரணில், மேலும் ஒரு ரில்லியன் ரூபாவை அச்சடிக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் நாட்டின் பணவீக்கமானது எதிர்வரும் வாரங்களில் 40 வீதத்தை தொடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 21.5 வீதமாக காணப்பட்ட வருடாந்த அடிப்படையிலான பணவீக்கமானது ஏப்ரல் மாதம் 33.8 வீதமாக உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

