வெளிப்பட்டது ரணிலின் அரசியல் சாணக்கியம்!
நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலையில் இது ஒரு சரியான தெரிவு. மேலும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் சாணக்கியம் வெளிப்படுகின்றது.
தனி ஒரு மனிதனாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து பிரதமராகியிருக்கின்றார் என முன்னாள் அமைச்சர் வடிவேல் புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் இந்த பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டவுடன் அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அனைத்தும் சிந்தித்து பார்க்க வேண்டியவைகளாகவே இருக்கின்றன.
நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினை உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கு அவரால் மாத்திரமே தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும்.
பிரதமர் பதவியேற்ற சில நிமிடங்களில் அவருக்கு சர்வதேச ரீதியாக பல தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதன் மூலம் சர்வதேசத்துடன் இவர் கொண்டுள்ள தொடர்புகளை தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக அமெரிக்கா இந்தியா ஜப்பான் போன்ற நாடுகளை குறிப்பிடலாம்.
அதற்கு காரணம் அவர் ஜனநாயக நாடுகளுடன் கொண்டுள்ள மிகவும் நெருக்கமான உறவு. இந்த நாடுகளின் ஜனநாயகத்தை நிலைநாட்டுகின்ற அமைப்புகளின் தலைவராகவும் பிரதித் தலைவராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
இதன் காரணமாக சர்வதேசம் அவரை மதிக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர அவரை விமர்சனம் செய்வதால் எதுவும் நடக்காது.
எனவே அடுத்து வருகின்ற ஆறு மாதத்தில் பிரச்சினைகளுக்கு ஒரளவு தீர்வு கண்டு ஒரு தேர்தலை நோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டில் பிரதமராக செயற்பட்ட காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக வளர்ச்சியடைந்திருந்தது.
தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. தொழில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. எனவே இவருடைய தூர நோக்கு சிந்தனை காரணமாகவே இந்த நாட்டில் பல அபிவிருத்தி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரணில் இதுவரையில் அரசியலில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொண்டவர் அல்ல. இனவாதி இல்லை. எனவே இன்றைய நிலையில் பிரதமராக பதவிவகிக்கக்கூடிய ஒரே ஒரு தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.
அவரை ஜக்கிய தேசிய கட்சியின் பிரதமராக பார்க்காமல் நாட்டிற்கான பிரதமராக பார்த்தால் அவரை புரிந்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
