நாடாளுமன்றில் பொய்யுரைத்துள்ளார் ரணில் : சாலிய பீர்ஸ் குற்றச்சாட்டு!
தாம், 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பிரதமராக பதவியேற்கும் அபிலாசைகளை கொண்டிருந்ததாக அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறியதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் நிராகரித்துள்ளார்.
தனது முகநுல் பக்கத்தில், இது தொடர்பில் ஒரு பதிவை பகிர்ந்துள்ள பீரிஸ், அதிபர் தனது பெயரை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதாகவும், தனக்கு பிரதமர் பதவியில் ஆசை இருப்பதாக பொய் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
இணையப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் குறித்து ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கை!
தனிப்பட்ட அபிலாசைகள்
“அதிபருக்கு பதில் சொல்ல முடியாத நிலையில், நாடாளுமன்ற போர்வையின் கீழ் இந்த பொய்யான கருத்துக்களை வெளியிட்டார்.
இந்தநிலையில் அவர் போன்ற அரசியல்வாதிகளைப் போலல்லாமல், தாம்ஒருபோதும் நாட்டின் தேவைகளுக்கு மேல் தனிப்பட்ட அபிலாசைகளை வைக்கவில்லை.
அத்துடன் தமது கொள்கைகளை தனிப்பட்ட லாபத்திற்காகவோ அல்லது பதவியின் பேராசைக்காகவோ ஒருபோதும் தியாகம் செய்ததில்லை.
2022, மே மாதத்தில் முன்வைக்கப்பட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவுகள் ஒருபோதும் தனிநபர்களைப் பற்றியது அல்ல.
அவை அதன் செயற்குழுவால் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.
இலங்கையின் அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் நோக்கிலேயே சட்டத்தரணிகள் சமூகம் இந்த முன்மொழிவுகளை முன்வைத்தது.” என சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |