சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தினேஷ் குணவர்தன!
Sri Lanka
Accident
By pavan
சிறிலங்காவின் பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவிற்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ வியஜம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று(14) கொழும்பிலிருந்து புறப்பட்ட பிரதமர் நாளை முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன தென் ஆசிய ஏற்றுமதி, இறக்குமதி கண்காட்சியின் விசேட அதிதியாகவும் தினேஷ் குணவர்தன பங்கேற்க உள்ளார்.
பேச்சுவார்த்தை

இந்த விஜயத்தின் போது சீனாவின் பல்வேறு முக்கியஸ்தர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரதமருடன் இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, ஜனக வக்கும்புர மற்றும் கனக ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் சென்றுள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்