அடிக்கடி ரஞ்சன் ராமநாயக்கவை சிறையில் சந்திக்கும் கோட்டாபயவுக்கு நெருக்கமான வர்த்தகர்!
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த ரஞ்சன் ராமநாயக்க சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனது உறுப்புரிமையை இழந்துள்ளார்.
இவ்வாறு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்ப்பதற்காக அரச தலைவருக்கு மிகவும் நெருக்கமான வர்த்தகர் ஒருவர் அடிக்கடி சிறைச்சாலைக்கு சென்று வருவதாக தெரியவருகிறது.
இந்த வர்த்தகரின் தலையீடு காரணமாக ரஞ்சன் ராமநாயக்க எதிர்நோக்கி வந்த உடற்பயிற்சி செய்தல், உணவு மற்றும் மருந்து பிரச்சினை என்பன தீர்க்கப்பட்டுள்ளன.
அத்துடன் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது குறித்தும் இந்த வர்த்தகர், அரச தலைவரிடம் பேச தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கரை ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சனை, அரச தலைவரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி, சிங்கள திரைப்பட கலைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
