அலரி மாளிகைக்கு செல்லக்கூடிய நிலைமை இன்னும் ஏற்படவில்லை! பிரதமர் அறிவிப்பு
Dinesh Gunawardena
Sri Lanka
SL Protest
By pavan
அலரி மாளிகைக்கு செல்லக்கூடிய நிலைமை இன்னும் ஏற்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஓரிரு சம்பவங்களில் இருந்து ஒரு நாட்டைப் பற்றிய தெளிவான சித்திரத்தை உருவாக்க முடியாது எனத் தெரிவித்த அவர், அரசமைப்புச் சட்டத்திற்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
நிலையான அரசாங்கம்
சர்வதேச விவகாரங்கள் பற்றி பேசுவதற்கு முன், நாட்டின் உள்துறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், வெளிநாடுகளின் ஆதரவை பெற அரசு செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.
நிலையான அரசாங்கம் இல்லாமல் ஒரு நாடு முன்நோக்கி செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
