கோட்டாபயவை பகடைக்காயாகப் பயன்படுத்தி கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா - அம்பலப்படுத்திய அதிகாரி!

Galle Face Protest Chandrika Kumaratunga Gotabaya Rajapaksa Sri Lanka India
By Kalaimathy Jul 26, 2022 12:09 PM GMT
Report

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதலயில் இருந்து விலக வைக்கும் போராட்டத்தின் பின்னணியில் மூளையாக செயற்பட்டவர் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என விமானப்படையின் முன்னாள் அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு சிங்கள பௌத்த மக்கள் மீது கோபம் இருப்பதாகவும் காலிமுகத்திடல் போாராட்டம் என்பது போராட்டம் அல்ல அது பயங்கரவாதம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கீர்த்தி ரத்நாயக்க இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இந்தியா. கோட்டாபய ராஜபக்ச வெறும் பகடைகாய் மாத்திரமே.

போராட்டம் நடத்திய இலங்கையில் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பான தகவல் எனக்கு கிடைத்தது. இதனை நான் கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட ஊழியர்கள் குழுவில் இருக்கும் ஷர்மிளா ராஜபக்சவுக்கு 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி என்னை கைது செய்வதற்கு முன்னர் இந்த தகவலை நான் அவருக்கு வழங்கினேன்.

முன்கூட்டியே கோட்டாபயவின் பதவி விலகல் தொடர்பில் வெளியான தகவல்

கோட்டாபயவை பகடைக்காயாகப் பயன்படுத்தி கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா - அம்பலப்படுத்திய அதிகாரி! | Sri Lanka Protest Galle Face Peoples Chandrika

கோட்டாபய ராஜபக்ச இன்னும் ஒரு வருடத்தில் வீட்டுக்கு செல்வார் என நான் தெளிவாக கூறியிருந்தேன். கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பும் திட்டம் வகுக்கப்பட்டு விட்டது. அவருக்கு வீட்டுக்கு செல்ல நேரிடும் என்று ஷர்மிளா ராஜபக்சவிடம் கூறினேன்.

நாட்டில் நடக்க போகும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உட்பட அனைத்து விடயங்கள் பற்றியும் எனக்கு தகவல் கிடைத்திருந்தது. இந்தியாவிடம் இருந்து எனக்கு இந்த தகவல்கள் கிடைக்கின்றன.

றோ மற்றும் தமிழகத்தில் உள்ள புலனாய்வுப் பிரிவுகள் இலங்கையில் நடக்கும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை தமிழக புலனாய்வுப் பிரிவினரே கண்டறிந்தனர்.

அந்த புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடைய நபர்களிடம் இருந்தே எனக்கு தகவல்கள் கிடைத்தன. இவை நான் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் கூறிய விடயங்கள்.

இந்தியாவின் குடியரசு தினத்தில் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. தாக்குதலை திட்டமிட்டவர் விப்லால் மௌலவி.

இந்தியாவில் உள்ள விகாரை மீது தாக்குதலுக்கு திட்டம்

கோட்டாபயவை பகடைக்காயாகப் பயன்படுத்தி கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா - அம்பலப்படுத்திய அதிகாரி! | Sri Lanka Protest Galle Face Peoples Chandrika

என்னை கைது செய்த பின்னர், அவர் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றார். சென்னை எக்மோரில் உள்ள மஹாபோதி விகாரை மீது தாக்குதல் நடத்த விப்லால் மௌலவி, தமிழக புலனாய்வுப் பிரிவை சேர்ந்த ஒருவருக்கு இரண்டு மில்லியன் ரூபா வழங்கியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்தியா, அமெரிக்கா, அயர்லாந்து பல்கேரியா போன்ற நாடுகள் விசா வழங்க மறுத்தமை உண்மையானது. காலிமுகத்திடலில் நடப்பது போராட்டம் அல்ல காலிமுகத்திடல் பயங்கரவாதம்.

பொருளாதார நெருக்கடிக்கு தொடர் போராட்டங்கள் மூலம் தீர்வை பெற முடியாது. இலங்கையில் அடிப்படைவாத காவிகள் குழு இருந்தது. ஞானசார, அத்துரலியே, இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ, மாகல்கந்த போன்ற தேரர்கள் அடிப்படைவாத காவிதாரிகள்.

இவர்கள் இனவாதத்தை தூண்டி விடும் நபர்கள். இவர்களைப் போன்றவர்கள் பற்றி புத்த பகவானும் கூறியுள்ளார். காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் முன்னாள் அதிபர் சந்திரிக்கா இருக்கின்றனர்.

அவரே அமெரிக்க நிறுவனம் ஒன்றின் பிராந்திய பிரதானி. போராட்டத்திற்கு நிதியுதவிகளை வழங்கினார். ரெட்டா போன்றவர்கள் எடுபிடிகள். சந்திரிக்காவுக்கு பௌத்த சிங்கள் மக்கள் மீது பெரிய கோபம் இருக்கின்றது.

பௌத்த சிங்கள் மக்கள் மீது சந்திரிக்காவிற்கு கோபம்

கோட்டாபயவை பகடைக்காயாகப் பயன்படுத்தி கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா - அம்பலப்படுத்திய அதிகாரி! | Sri Lanka Protest Galle Face Peoples Chandrika

அவரது தந்தையை சுட்டுக்கொன்ற புத்தரக்கித்த தேரர் மீது அவருக்கு கோபம் இருக்கலாம். மகிந்த ராஜபக்சவின் 52 நாள் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போதும் சந்திரிக்கா, அரசியல் சூழ்ச்சி ஒன்றை செய்ய முயற்சித்தார்.

மகேஷ் சேனாநாயக்கவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தார். தற்போது போன்றே அப்போதும் நாட்டில் அராஜக நிலைமை காணப்பட்டது. அப்போது இரண்டு பிரதமர்கள், ரணிலும் தன்னை பிரதமர் என்றார், மகிந்தவும் தன்னை பிரதமர் என்றார்.

அப்போதும் சந்திரிக்கா அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தார். காலிமுகத்திடல் போராட்டத்தில் பின்னணியில் இருக்கும் சந்திரிக்காவின் முக்கிய நோக்கம் கோட்டாபயவை ஆட்சியில் இருந்து அகற்றுவது.

கோட்டாபாய அதிபர் தேர்தலில் 60 வீத வாக்குகளை பெற முடியாமல் இருந்தது. முஸ்லிம் இனவாதத்தை தூண்ட போலி ஐ.எஸ். தாக்குதல் நடத்தப்பட உள்ளது என்று நான் முன்கூட்டியே தெரிவித்திருந்தேன்.

ஈஸ்டர் தாக்குதலில் கோட்டாபய ஒரு பகடைகாய் மாத்திரமே. இந்த பிராந்தியத்தின் பெரிய அண்ணன் இந்தியா, இந்தியாவே இந்த பிராந்தியத்தை கையாள்கிறது.

பிராந்தியத்தின் பெரிய அண்ணனே ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி. இந்தியாவில் தற்போது என்ன நடக்கின்றது. அது ஒரு இந்து நாடு, அந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின் ஜிகாத் பூச்சாண்டியை அப்படியே முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்கின்றது.

சுதந்திரத்திற்கு முன்பு போல் இந்தியாவுடன் பாகிஸ்தானும் பங்களாதேஷூம் இணைந்தே இருந்திருந்தால், இந்தியாவில் பெரும்பான்மை மக்களாக இந்துக்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

முஸ்லிம்களே பெரும்பான்மை மக்களாக இருந்திருப்பார்கள். இதனால், இந்தியா இந்து நாடு என்பதை காப்பாற்றிக்கொள்ள முஸ்லிம் ஜிகாத் பிரச்சினையை முதன்மையாக கொண்டு அரசியல் காய்நகர்த்தல்களை நகர்த்தி வருகிறது.

அதேவேளை கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு சென்றாரா அல்லது நாட்டிற்குள் எங்கேனும் மறைந்து இருக்கின்றாரா, மிரிஹானவில் உள்ள அவரது வீட்டுக்குள் இருக்கின்றாரா என்பதை புலனாய்வு செய்து வருகின்றேன்.

எனினும் இன்னும் சிறிது காலத்தில் கோட்டாபய ராஜபக்ச திரும்பி வருவார் அல்லது அவர் மறைந்திருக்கும் இடத்தில் இருந்து வெளியில் வருவார் எனவும் கீர்த்தி ரத்நாயக்க இதனை கூறியுள்ளார். 

கீர்த்தி ரத்நாயக்க என்ற இந்த முன்னாள் விமானப்படை அதிகாரி, ஈஸ்டர் தாக்குதல் நடைபெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அப்படியான தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றில் தகவல் வெளியிட்டிருந்தார்.

அத்துடன் காலிமுகத்திடல் போராட்டம் போன்ற போராட்டம் நாட்டில் நடக்க போகிறது என்று தகவல் வெளியிட்டிருந்தார். 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி