சிறிலங்கா போராட்டத் தலைவர் மீது கத்திக்குத்து! பின்னணியை நோட்டமிடும் மேற்குலகு
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக அரகல எனப்படும் அறவழிப் போராட்டங்களை நடத்திய முக்கிய செயற்பாட்டு முகமான டிலான் சேனாநாயக்க மீது தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கக்கூடும் என்ற ஊகங்கள் பரபரப்பாக உலா வருகின்றன.
கொழும்பு - நுகேகொவில் உள்ள அவரது வதிவிடத்திற்கு அருகில் வைத்து இருவர் அவர் மீது கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதனால், கால் மற்றும் கைகளில் காயமடைந்த சேனாநாயக்கவுக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என கூறப்படுகிறது.
எனினும் ராஜபக்ச அதிகார மையத்திற்கு எதிரான போராட்டங்களில் மிகவும் சுறுசுறுப்பான வகிபாகத்தைக் கொண்ட இவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் பலமான ஐயங்கள் உள்ளன.
பின்னணியை நோட்டமிடும் மேற்குலகு
கடந்த பத்தாம் திகதி அனைத்துலக மனித உரிமை நாளில் சிறிலங்கா படைத்தரப்பின் முக்கிய நபருக்கு அமெரிக்கா தடை விதித்து ஐந்து நாட்களுக்குப் பின்னர் அறவழிச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் புலனாய்வு பிரிவு இன்னமும் அரகல செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதாக கூறப்படும் நிலையில், டிலான் சேனா நாயக்க மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியை அறிந்து கொள்ள கொழும்பில் உள்ள மேற்குலக ராஜதந்திர வட்டாரங்கள் தற்போது ஆவல் கொண்டுள்ளது.
இதன் விரிவான பார்வை மற்றும் இலங்கை - உலக நடப்புக்களை இன்றைய செய்தி வீச்சில் காணலாம்.