ரணிலின் செயற்பாட்டினால் மகிழ்ச்சியில் நாமல்
Gotabaya Rajapaksa
Namal Rajapaksa
Ranil Wickremesinghe
By Kanna
வன்முறைக்கு அடக்குமுறையே ஒரே பதில் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதிபர் கோட்டாபய ராஜபக்ச செய்யாததை அதிபர் ரணில் நடைமுறைப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
“அடக்குமுறையை ஏவாவிட்டால் இந்த நாட்டில் ஒழுக்கம் நிலைநாட்டப்படமாட்டாது. முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அதை செய்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். சில காரணங்களால் அது நடக்கவில்லை.
முன்னாள் அதிபர் கோட்டாபய அன்று வன்முறைக்கு தலைமை தாங்குபவர்களுக்கும், சமூக ஊடகங்களில் வன்முறையைப் பரப்புபவர்களுக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
