வன்முறை குழுக்களும் பயங்கரவாத குழுக்களுமே மக்களை தூண்டி விட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தியுள்ளன!
sajith
sri lanka
protest
government
parliament
podujana peramuna
By Kalaimathy
சில வன்முறை குழுக்களும், பயங்கரவாத குழுக்களும் இணைந்தே நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச அல்லது எதிர்க்கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பது ஆர்ப்பாட்டத்தை நடத்துவோரின் நோக்கமல்ல, அவர்கள் அரசாங்கத்தின் மீதும் எதிர்க்கட்சி மீதும் குற்றம் சுமத்துகின்றனர்.
லிபியா மற்றும் ஈராக்கில் நடந்தது போலவே தற்போது இலங்கையில் நடக்க போகின்றது. சில வன்முறை குழுக்களும் பயங்கரவாத குழுக்களும் மக்களை தூண்டி விட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.
லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் இதனையே செய்தனர். தற்போது இலங்கையிலும் அவ்வாறான நிலைமை ஏற்படுத்த இந்த குழுவினர் முயற்சித்து வருகின்றனர் எனவும் எஸ்.எம்.சந்திரசேன கூறியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி