மக்களை துன்புறுத்தும் அரசை வெளியேற்றுவோம்: வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்! (காணொளி)
Colombo
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Bar Association of Sri Lanka
By Kanna
“மக்களை துன்புறுத்தும் அரசை வெளியேற்றுவோம்” என்ற தொனிப்பொருளில் சட்டத்தரணிகள் சத்தியாக்கிர போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது கொழும்பில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது,
முடிவில்லா போராட்டமும் விடைகொடுக்கா அரசும்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வினைப் பெற்று கொடுக்காத நிலையில் அரச தலைவரையும் அரசாங்கத்தையும் வெளியேறுமாறு நாட்டில் தற்போது பரவலாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தலைநகரில் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கோட்டா கோ கம போராட்டம் மூன்று மாதங்களை கடந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
முடிவில்லா மக்கள் போராட்டங்களுக்கு அரச தலைவரோ அரசாங்கமோ இதுவரை விடை கொடுக்கவில்லை.
