கோட்டாபய, ரணில் அரசுக்கு எதிராக வீதியில் இறங்கிய சஜித் அணி! (காணொளி)
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தின் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு குறித்த போராட்டமானது ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்காத நிலையில். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என வலிறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, எரான் விக்ரமரத்ன, பீல்ட் மார்ஷல் ரத் பொன்சோகா மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியுார் குறிழத்த போராட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளனர். இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அரச தலைவர் மாளிகையை நோக்கி குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
போராட்டம் நடைபெற்று அரைச தலைவர் மாளிகையை நோக்கி சென்றுகொண்டு இருக்கும் நிலையில் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டுள்ளார்.
இதேவேளை, அரச தலைவர் மாளிகையின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
