இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் : மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஜனவரி முதல் செப்டம்பர் வரை) சுற்றுலாத்துறை வருமானம் 2,200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் ஈட்டப்பட்ட மொத்த சுற்றுலா வருமானம் 2,245.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எனினும், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியாகும்.
சுற்றுலாப் பயணிகள் வருகை
கடந்த ஆண்டு இதே காலத்தில் இலங்கை 2,472.9 மில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருமானத்தைப் பெற்றிருந்தது.

அத்துடன், செப்டெம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை வருமானம் 185.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
இது முந்தைய ஆண்டின் செப்டெம்பர் மாதத்தில் பதிவான 182.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய அதிகரிப்பாகும்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரை மொத்தம் 1,693,679 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் இவர்களே இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானத்திற்குப் பங்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |