மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கையை அடியோடு நிராகரித்தது சிறிலங்கா அரசு
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த சட்டம் இரத்து செய்யப்பட்டால், உயிர்த்த ஞாயிறு படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 310 தீவிரவாதிகள் விடுவிக்கப்படுவார்கள் என அரசு உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சட்டத்தின் காரணமாகத்தான் 2019 ஏப்ரல் 21 அன்று நடந்த உயிர்த்த ஞாயிறு படுகொலையில் ஈடுபட்ட தீவிரவாதிகளை கைது செய்து விசாரிக்க முடிந்தது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்( Michelle Bachelet) ஆகியோர் இந்த சட்டத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ள சுவிட்சர்லாந்து அரசு, கடுமையான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையும் அமுல்படுத்தி வருவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
