ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்தது இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என இலங்கை தெரிவித்துள்ளது.
இதன்படி தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான அடிப்படையாக இருந்த மனித உரிமைகள் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஜெனீவாவிற்கான இலங்கை தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்க்கும்
அதன் கீழ் செயல்படுத்தப்படும் பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என்பதையும் இது உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தகைய வெளிப்புற திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லிணக்க செயல்முறைக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறையுடன் நெருக்கமான உறவைப் பேணுவதாகவும் இலங்கை கூறியுள்ளது.
இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கை
இது சம்பந்தமாக, இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் இறுதி அறிக்கை துல்லியமான மற்றும் சமநிலையான முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை தூதரகம் கோரியுள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம், நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் சரிசெய்யப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து தனது சமர்ப்பணத்தை முன்வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
