ரணிலின் செயற்றிட்டங்களை மாற்றினால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும்: எச்சரிக்கும் எம்.பி
வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) செயற்றிட்டத்தை மாற்றினால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் என நாடாளுமன்ற உறுப்பினருர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வஜிர அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தொடர்ந்து தெரிவிக்கையில், “இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமான தேர்தலாகும். நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல சட்ட சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம்
பொருளாதார பரிமாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யார் கொள்கையை முன்வைத்தாலும், அது இந்த சட்டங்களின்படியே செய்யப்பட வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கும் நாடுகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். இந்த சட்டங்களின்படி நாங்கள் செயல்படுவோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
எனவே வீழ்ந்து கிடந்த இந்த நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அந்த நிபந்தனைகள் திருத்தப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும்.“ என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |