அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி
2026ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 2.3 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) நேற்று (24) வெளியிட்ட பொருளாதார அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, கடந்த வாரத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 1.8 சதவீதம் சரிந்திருந்தாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்டியல்களின் மதிப்பு
அதேபோல், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பத்திரங்கள் மற்றும் உண்டியல்களின் மதிப்பு பெருமளவில் நிலையாக காணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 313.62 ரூபாயிலிருந்து 314.03 ரூபாயாகவும் விற்பனை விலை 321.09 ரூபாயிலிருந்து 321.87 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்