அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு...!
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 4.4% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில்,பெப்ரவரி 29 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரையான நாணய மாற்று விகிதத்தின் போக்கின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் (2023) டிசெம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து காணப்பட்ட நாணய மாற்று விகிதத்தின் பெறுமதியான போக்கு 2024 இல் இதுவரை தொடர்ந்து ஓரே போக்கை காண்பிக்கிறது.
ரூபாவின் பெறுமதி
அதன்படி, பெப்ரவரி 29 வரையான காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக 4.4 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அதுமாத்திரமன்றி, குறித்த கால இடைவெளியில், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென், இந்திய ரூபாய் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் போன்ற பிற முக்கிய நாணயங்களின் நாணய நகர்வுகளுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |