ஐ.ம்.எப் கடனுதவி: மீளாய்வு நடத்த இலங்கை விஜயம் செய்யும் பிரதிநிதிகள் குழு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை மீளாய்வை மேற்கொள்வதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை மீளாய்வு எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மீளாய்வு நடவடிக்கை
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் குறித்த மீளாய்வு நடத்தப்படும் என நிதியம் ஏற்கனவே உறுதியளித்திருந்தது.
இந்த நிலையில், எதிர்வரும் மாதம் நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாகவும் அவர்கள் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் தங்கி மீளாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் எனவும் சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கடனுதவி
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றுவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளனர்.
இந்த மீளாய்வு நடவடிக்கையின் பின்னர், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாம் தவணை கடனுதவி கிடைக்கப் பெறும் எனவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |