பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலக்கரி மோசடி - பின்னணியில் அநுர..! சாடும் நாமல்
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலக்கரி ஊழல் மோசடியாளர்களையும் அதற்குப் பொறுப்பானவர்களையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதுகாப்பதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் முந்தைய 'நல்லாட்சி" அரசாங்கத்தைப் போலவே இருப்பதாக விமர்சித்த நாமல் ராஜபக்ஷ பிக்பொக் கெட் அடித்தவனே 'திருடன் திருடன்" என கூச்சலிட்டுக்கொண்டு ஓடுவது போன்ற நாடகத்தையே அரசாங்கம் அரங்கேற்றுவதாகக் கூறினார்.
தரமற்ற நிலக்கரியை இறக்குமதி
நிலக்கரி ஊழலில் ஈடுபட்டவர் களை ஜனாதிபதி பாதுகாத்து வருவதாகவும் அவர் விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சுக்குக் கொண்டுவரப்பட்ட நபரே இன்று இந்த நிலக்கரி ஊழலுக்கும் பின்னணியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவரை தற்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமித்து தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து இந்த ஊழல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்
ஜனாதிபதியின் நடத்தையையும் அறிக்கைகளையும் பார்க்கும் போது இந்த ஊழலின் பின்னணியில் அவரே இருக்கிறார் என்பது தெளிவாகிறது எனத் தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்வு
நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எந்தவொரு கவலையும் இல்லை எனச் சுட்டிக் காட்டிய நாமல் ராஜபக்ஷ எரிபொருள் விலை உயர்ந்தாலும் அதற்கேற்ப அரச ஊழியர்கள், வைத்தியர்கள் அல்லது அத்தியாவசிய சேவை வழங்கும் அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் உள்நாட்டில் நெல் அறுவடை செய்யப்படும் காலத்திலேயே அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் முற்படுவது விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்தும் செயலாகும் எனவும் அவர் எச்சரித்தார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் தமது அரசாங்கம் மக்களுக்கு 5,000 ரூபா நிவாரணத்தை பலமுறை வழங்கியதை நினைவு கூர்ந்த அவர், தற்போதைய அரசாங்கம் நிலக்கரி ஊழலால் ஏற்பட்ட நஷ்டத்தை மக் கள் மீது சுமத்தி, மின்சாரக் கட்ட ணம் மற்றும் வரிச் சுமைகளை அதிக ரிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்