சுட்டு வீழ்த்தப்பட்ட அடுத்த F-35 ரக போர் விமானம்...! அதிரடி காட்டும் ஈரான்
இரண்டாவது அமெரிக்க F-35 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது.
மத்திய ஈரானின் வான்வெளியில் அமெரிக்க F-35 ரக போர் விமானம் அழிக்கப்பட்டதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) பத்திரிக்கைச் சேவை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி தெரிவித்துள்ளது.
அந்தப் போர் விமானம் முற்றிலுமாகச் சேதமடைந்து நொறுங்கி விழுந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டாவது விமானம்
கடந்த சில நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டாவது விமானம் இது என்று ஐ.ஆர்.ஜி.சி. வலியுறுத்தியுள்ளது.
Spokesman of Iran's Khatam al-Anbiya Headquarters:
— Mehr News Agency (@MehrnewsCom) April 3, 2026
🔺 A second US fifth-generation F-35 was struck and downed over central Iran.
🔺 Given the massive explosion on impact and during the crash, the pilot is unlikely to have ejected. pic.twitter.com/8TX4jsbebw
சேதத்தின் அளவு அதிகமாக இருப்பதால், விமானியின் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்களுக்கு ஈரான் ஆயுதப் படைகள் அளிக்கும் முதல் பதிலடியாகவே இந்த நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்