போரில் நுழையும் ரஷ்யா - ஈரான் போர் முடிவுக்கு...! கிரெம்ளிளிலிருந்து பறந்த செய்தி
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட தனது பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று மொஸ்கோவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) பிராந்தியத் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது
தேவைப்படும் பட்சத்தில் இராணுவச் சூழலை அமைதிப் பாதைக்கு மாற்ற ரஷ்யா உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரை மற்றும் நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்து அவர் பரிசீலித்து வரும் கருத்துக்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பெஸ்கோவ், நேட்டோவை ஒரு 'பகைமை வாய்ந்த கூட்டணி' என்றே ரஷ்யா கருதுவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை
இதேவேளை உலக பொருளாதாரத்தை ஆட்டம் காட்ட வைத்துள்ள, மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கு 40 நாடுகள் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுப்பது குறித்து பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யுவெட் கூப்பர் (Yvette Cooper) தலைமையில் இந்த மெய்நிகர் (Virtual) கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.
எந்த ஒப்பந்தங்களும் இன்றி கூட்டம் முடிவடைந்த போதிலும், அந்த நீர்வழியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு ஈரான் போக்குவரத்து கட்டணங்களை விதிக்கக் கூடாது என்றும், அனைத்து நாடுகளும் அதனைத் தடையின்றிப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஒருமித்த கருத்து நிலவியதாக அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்