பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க முடியாது - உதய கம்மன்பில சவால்

Pillayan Sri Lanka Magistrate Court Udaya Gammanpila
By Abi Apr 03, 2026 08:17 AM GMT
Report

பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த உள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் நேற்று (02.04.2026) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையானை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்ட விடயம் பொய் என்பது ஒரு வருடத்துக்கு பின்னர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உருக்குலைந்த சடலமாக மீட்கப்பட்ட யாழ் விரிவுரையாளர் - ஊடகங்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

உருக்குலைந்த சடலமாக மீட்கப்பட்ட யாழ் விரிவுரையாளர் - ஊடகங்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள்

ஒரு வருடகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் நேற்று (02.04.2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க முடியாது - உதய கம்மன்பில சவால் | Gammanpila Continue Pillaiyaan Court Of Appeal

ஆனால் அவர் மீது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் பிள்ளையான் மீது சுமத்தப்படவில்லை.

பிள்ளையான் விடுதலை புலிகளுக்கு எதிராக செயற்பட்டமை தவறு எனவே இராணுவத்தில் இணையாமல் அவர் ஆயுதமேந்தி விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டமை சட்டவிரோதமானது என்றே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்தார்கள்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலக்கரி மோசடி - பின்னணியில் அநுர..! சாடும் நாமல்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலக்கரி மோசடி - பின்னணியில் அநுர..! சாடும் நாமல்

அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்

அதேபோல் அவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பான விடயங்களும் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.

பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க முடியாது - உதய கம்மன்பில சவால் | Gammanpila Continue Pillaiyaan Court Of Appeal

காணாமலாக்கப்பட்ட உபவேந்தர் விவகாரத்தில் பிள்ளையானை கைது செய்ய முடியாது. ஆகவே அவரை விடுதலை செய்யுமாறு நாங்கள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தோம்.

பிள்ளையான் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கோரும் வரையில் பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன். விடுதலை புலிகள் அமைப்பு நடத்திச் சென்ற சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்ப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சிக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது” என உதய கம்மன்பில ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆசிரியர் இடமாற்றம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இடைக்கால தடை

வடக்கு ஆசிரியர் இடமாற்றம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இடைக்கால தடை

யாழ். பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு - சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ். பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு - சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

       

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening

ReeCha
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026