யாழ். பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு - சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Jaffna University of Jaffna Murder
By Theepan Apr 03, 2026 03:32 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டு தனங்கிளப்பு பகுதியில் உருக்குலைந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நேற்று மீண்டும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் ஆகியோரும், இரண்டாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரள உள்ளிட்ட மூன்று சட்டத்தரணிகளும் முன்னிலையாகினர்.

முடங்கிய ஹோர்முஸ் நீரிணை - ஆட்டம் காட்டும் ஈரான்: ஒன்று சேர்ந்த 40 நாடுகள்

முடங்கிய ஹோர்முஸ் நீரிணை - ஆட்டம் காட்டும் ஈரான்: ஒன்று சேர்ந்த 40 நாடுகள்

தீர்ப்பு வழங்கும் வரை எவரும் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாது

முதலாவது சந்தேக நபரான சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலையாகவில்லை. இரண்டாவது சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமந்த அத்துக்கோரள நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்து விண்ணப்பங்களை செய்ததுடன், முதலாவது சந்தேக நபரும் இரண்டாம் சந்தேக நபரும் சட்டரீதியாக திருமணம் செய்த போதும், முதலாவது சந்தேக நபரின் உடல் உள துன்புறுத்தல் காரணமாக இரண்டாம் சந்தேக நபர் மணநீக்கம் செய்யும் முடிவை எடுத்து அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என தெரிவித்தார்.

யாழ். பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு - சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு | Suspect Arrested Lecturer Murder Ordered April16Th

மேலும், இரண்டாவது சந்தேக நபரின் வாக்குமூலத்தை பெறுவது தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி உளநிலையை உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை எவரும் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாது என தெரிவித்த சட்டத்தரணி, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளாந்த பத்திரிகையொன்றில் வெளியான தலைப்புச் செய்தியை சுட்டிக்காட்டி அது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

முதலாவது சந்தேக நபரால் வழங்கப்பட்ட வாக்குமூலம் பத்திரிகையொன்றில் முன்பக்க தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது.

சந்தேக நபரால் வழங்கப்பட்ட வாக்குமூலம் குற்றப்பத்திரத்தில் தாக்கல் செய்யப்படாமல் வெளிப்படுத்தக் கூடாது என்பது விதி. அது நியாயமான விசாரணையை பாதிப்புக்குள்ளாக்கும். ஊடகங்களில் வெளிவந்த செய்தி நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது. குறித்த செய்தியானது சமூக வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது சந்தேக நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும் தவறான விடயங்கள் பரப்பப்பட்டது. சில ஊடகங்கள் கூட செய்திகளை தவறாக திரிபுபடுத்தி வெளியிட்டது. இது தொடர்பில் நீதிமன்றம் ஊடகங்களுக்கு பொது எச்சரிக்கை ஒன்றை விடுக்க வேண்டும் என சமர்ப்பணம் செய்தார்.

இதேவேளை குறித்த கொலை வழக்கு தொடர்பாக சுயாதீனமான விசாரணை நடைபெற வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார். தனது சமர்ப்பணங்களை தொடர்ந்து முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், கடந்த வழக்குத் தவணையின் போது சந்தேக நபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பிலேயே நான் முன்னிலையாகினேன்.

யாழில் காவல்துறை அதிகாரியின் கொலை: பிரதான சந்தேக நபருக்கு நீதிமன்றின் உத்தரவு

யாழில் காவல்துறை அதிகாரியின் கொலை: பிரதான சந்தேக நபருக்கு நீதிமன்றின் உத்தரவு

நீதிமன்ற உத்தரவை பெற்றேன் என தவறாக செய்திகள் வெளியானது

சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை என்பது நீதிமன்ற பதிவேட்டிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விடயங்கள் இருக்க பொய்யாக இரண்டாம் சந்தேக நபருக்காக நான் முன்னிலையாகியதாக பல செய்திகள் பிரசுரமானது. அது மட்டுமில்லாமல் உயிரிழந்த விரிவுரையாளரின் மகன் என்னிடம் செய்த விண்ணப்பத்துக்கமைய உயிரிழந்தவரின் மகளை இறுதிச்சடங்கில் பங்கேற்க வைப்பது தொடர்பாக காவல்துறைக்கு தெரியப்படுத்தினேன்.

யாழ். பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு - சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு | Suspect Arrested Lecturer Murder Ordered April16Th

ஆனாலும் நான் இரண்டாம் சந்தேக நபரை பங்கேற்கச் செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை பெற்றேன் என தவறாக செய்திகள் வெளியானது. நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக தவறாக செய்திகளை பிரசுரிப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். பெரிய குற்ற செயல் இடம் பெற்றுள்ளது. விசாரணை ஆரம்பமாகி நடைபெறுகின்ற வேளையிலே இது சம்பந்தமாக பிரசுரிக்க கூடாத மற்றும் பொய்யான தகவல்கள் வெளிவருவது

விசாரணைக்கு பாதிப்பாக அமையும். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட தரப்பாக ஆழமான கரிசனை எமக்கு உண்டு. இதைக் கருத்தில் எடுத்து மன்று நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த விரிவுரையாளரின் வீட்டில் எடுத்த தடயப் பொருட்கள் உள்ளிட்ட சிலவற்றை நீதிமன்றம் ஊடாக நாம் காவல்துறையிடம் சமர்ப்பிக்கின்றோம். புலன் விசாரணை தங்கு தடையின்றி நடக்க காவல்துறை விசாரணைக்கு அவை தேவையோ இல்லையோ, அவற்றை நாம் ஒப்படைக்கின்றோம் இறந்த விரிவுரையாளர் கடந்த காலங்களில் செய்த முறைப்பாடு சம்பந்தமாகவும் சந்தேக நபர்கள் தொடர்பில் நிலுவையில் உள்ள வழக்குகள் சம்பந்தமாகவும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் என்றார்.

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதுடன் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களை அரசாங்கப் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். மூன்று தரப்புக்களின் சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

யாழ். பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு - சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு | Suspect Arrested Lecturer Murder Ordered April16Th

மேலும் இரண்டாம் சந்தேக நபர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கான மனநிலையில் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் ஊடகங்களின் செய்தி அறிக்கையிடல் குறித்த வழக்கின் தன்மையை பாதிப்பதாக மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் செய்தி பிரசுரிப்பவர்கள் இது தொடர்பில் அவதானமாக செயல்பட வேண்டும். பத்திரிகை பிரசுரிக்கும் விடயம் நீதிமன்ற விசாரணையை பாதித்து நீதிமன்ற செயற்பாடுகளை குழப்புவதாக அமைந்தால் அது நீதிமன்ற அவமதிப்பதாக கருதப்படும் எனவும் நீதிவான் எச்சரிக்கை விடுத்தார்.

யாழில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு...! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

யாழில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு...! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி