ஊடகவியலாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் திணறிய அஜித் பி. பெரேரா
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து இடம்பெற்ற ஊடகவியவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் எதிர்கட்சி எம்.பி அஜித் பி. பெரேரா அங்கிருந்து விலகிச் சென்ற விதம் குறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று (7) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில், நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கருத்தை அஜித் பி. பெரேரா வெளிப்படுத்தியிருந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்
ஆனால், ஊடகவியலாளர்கள் எதிர்கேள்விகளை எழுப்பியபோது, அவர்கள் பதிலளிக்காமல் அங்கிருந்து விலகிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அஜித் பி. பெரேராவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி, “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பேற்று அப்போது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி விலகினரா?” என்பதாகும்.
மேலும், மத்திய வங்கி பத்திரப் பத்திர மோசடி (Bond Scam) தொடர்பாக விசாரணை நடத்திய கோப் (COPE) குழுவின் இறுதி அறிக்கையில் ‘அடிக்குறிப்பு’ (Footnote) இணைத்த அஜித் பி. பெரேராவுக்கு, தற்போது நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோருவதற்கான நெறிமுறை உரிமை உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |