யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கும் அமெரிக்கா
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அனைத்து இலங்கையர்களுடனும் அமெரிக்கா துணை நிற்பதாக சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை முன்னிட்டு ஜுலி சங் தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கியப்பட்ட எதிர்காலத்திற்கான உறுதியையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையர்களுக்கு ஆதரவளிக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
15 ஆண்டுகள் பூர்த்தி
நீதி, சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளுக்காக போராடுபவர்களுடன் உறுதியான பங்காளியாக அமெரிக்கா தொடர்ந்தும் இருக்குமென அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நிலையான சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான பன்முகத்தன்மையை உள்ளடக்கிய வளமான எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு ஆதரவளிப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
On the anniversary marking 15 years since the end of Sri Lanka’s civil war, the United States stands in solidarity with all Sri Lankans, reflecting on the resilience and hope for a united future. We remain a steadfast partner to the Sri Lankan people, including those who continue…
— Ambassador Julie Chung (@USAmbSL) May 18, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |