நவீன பிரபாகரன்கள்! நுட்பங்களை அம்பலப்படுத்தும் அட்மிரல் மீற்றர்!
நவீன பிரபாகரன்களுடன் தாம் போராடுவதாக தென்னிலங்கையின் பௌத்த கடும்போக்கு சண்டிய அட்மிரல் சரத் வீரசேகரா நேற்று திருகோணமலை நீதிமன்ற முன்றிலில் ஒரு சன்னதக் கருத்தை வெளியிட்டார். இதுவும் சமகால அரசியலை அளவிடும் பறோமீற்றர் எனப்படும் அளவு மானியின் ஒரு அளவீடுதான்.
இலங்கையில் வராதுவந்த மாமணி ஆட்சி விளிப்பு அநுரவின் ஆட்சி குறித்து 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்த நம்பிக்கை ஒருவருடத்தில் கடந்த ஆண்டின் இறுதியில் இன்னும் குறைந்து புதிய ஆண்டான 2026 க்குள் நுழைந்தது. ஆனால் புதிய ஆண்டில் இது இன்னும் சிதைவடைவதற்குரிய ஆதாரங்கள் தையிட்டி முதல் திருமலை வரை வருகின்றன.
“திருமலை சட்டவிரோத புத்தர் சிலை மற்றும் அதனோடு அண்டிய நிர்மாணங்கள் நாட்டின் கடற்கரைகள் தொடர்பான பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிரானவை என்றாலும் சட்டமாஅதிபர் திணைக்களம் இப்போது இந்த விடயத்தில் பிக்குகளுடன் டீல் போடத்தலைப்படுவதாக தெரிகிறது.
இதற்கும் அப்பால் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரானவர் என கருப்படும் நாட்டின் பிரதி சட்டமா அதிபர் திலீப பீரிஸ் தற்போது மெல்ல மெல்ல ஓரங்கட்டப்படுவதான செய்திகள் கசிகின்றன.
இதேபோல 2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை ஆட்சி அமைந்ததும் வெளிப்படுத்துவதாக உறுதியளித்த அனுரதரப்பு அவ்வாறு செய்யவில்லையென இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் இந்தவாரம் தமது குற்றச்சாட்டை மீள்உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேபோல இன்னும் 3 நாட்களில் வரும் ஜனவரி 24, திகதியன்று 16 வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னலிகொடா என்ற ஊடகரும் கோட்டோவியரின் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான எரந்தா பீரிஸை கேர்ணல் பதவிக்கு உயர்த்திய நகர்வும் வந்துள்ள நிலையில் இந்தவிடயங்களையும் அதேபோல சில விடயங்களில் நிச்சயமற்றதன்மை நீட்சியடைவதற்கு அரசாங்கமே விரும்புவதான நுட்பங்களையும் தாங்கிவருகிறது செய்திவீச்சு…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |