இலங்கையின் முதன்மைப் பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு
கொழும்பு (Colombo) நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான நாட்டின் முதன்மை பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2025 மார்ச் மாதத்தில் -2.6% இலிருந்து ஏப்ரலில் -2% ஆக உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் (Department of Census and Statistics) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவுப் பணவீக்கம்
இதற்கமைய, உணவுப் பிரிவில், 2025 மார்ச் மாதத்தில் 0.6% ஆக இருந்த பிரதான பணவீக்கம், 2025 ஏப்ரல் மாதத்தில் 1.3% ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 2025 மார்ச் மாதத்தில் -4.1% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பிரதான பணவீக்கம், 2025 ஏப்ரல் மாதத்தில் -3.6% ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை 2024 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி (CBSL) 274.79 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
