ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பிரதம நீதியரசர்

Anura Kumara Dissanayaka Sri Lanka Supreme Court of Sri Lanka
By Sathangani Dec 02, 2024 06:59 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று காலை (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்ணாகவும், இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசராகவும் முர்து பெர்னாண்டோ வரலாற்றில் இணைகிறார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வுபெற்றதையடுத்து வெற்றிடமான பதவிக்கு அவரது பெயர் அரசியலமைப்பு சபையினால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர்

சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசதரப்புச் சட்டத்தரணியாக இணைந்து 30 வருடங்களுக்கும் மேலாக அங்கு பணியாற்றியுள்ள முர்து பெர்னாண்டோ, 2018 மார்ச் மாதம் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பிரதம நீதியரசர் | Sri Lanka S New Chief Justice To Take Oath Today

முர்து பெர்னாண்டோ சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றியதுடன், உயர் நீதிமன்றத்தின் தற்போது பணியாற்றும் சிரேஷ்ட நீதிபதி இவராவார்.

மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் பழைய மாணவியான முர்து பெர்னாண்டோ, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் சட்டத்துறை இளமானிப் பட்டம் பெற்றுள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

முதலாம் இணைப்பு 

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ (Murdu Fernando) சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் இன்று (02) இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய (Jayantha Jayasuriya) ஓய்வு பெற்ற நிலையில், முர்து பெர்னாண்டோ இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

வவுனியா குளத்தின் வான் பாயும் இடத்தில் குவியும் மீன்கள் : போட்டி போட்டு பிடிக்கும் மக்கள்

வவுனியா குளத்தின் வான் பாயும் இடத்தில் குவியும் மீன்கள் : போட்டி போட்டு பிடிக்கும் மக்கள்

உயர் நீதிமன்ற நீதியரசர்

1985ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட இவர், 1997ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும், 2014ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றார்.

ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பிரதம நீதியரசர் | Sri Lanka S New Chief Justice To Take Oath Today

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட அவர், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

இந்நாட்டின் பிரதம நீதியரசராக பதவியேற்கும் இரண்டாவது பெண்மணியாக முர்து பெர்னாண்டோ வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளார்.

யாழில் லாப்ஸ் எரிவாயு விநியோக வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்

யாழில் லாப்ஸ் எரிவாயு விநியோக வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்

மாவீரர்களை நினைவேந்த தமிழருக்கு உரிமை உண்டு - அநுர அரசு பதிலடி

மாவீரர்களை நினைவேந்த தமிழருக்கு உரிமை உண்டு - அநுர அரசு பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020