இலங்கையின் டொலர் கையிருப்பில் அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2024 ஒக்டோபர் மாதத்தில் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.
2024 செப்டம்பர் மாதத்தில் பதிவான 5.99 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இது 7.9% அதிகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்க கையிருப்பு
இதற்கிடையில், உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு 2024 செப்டம்பரில் 40 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து ஒக்டோபரில் 42 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இது செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.8% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.38 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது.
சீனாவின் மக்கள் வங்கி
2024 செப்டம்பரில் 5.94 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இது 7.3% அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இதில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமமான சீனாவின் மக்கள் வங்கி (PBoC) இடமாற்று வருமானம் அடங்கும் எனவும் இது பயன்பாட்டின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |