அதிக வரி செலுத்தும் 100 செல்வந்தர்களை அடையாளம் காண இறைவரித் திணைக்களம் தீர்மானம்
இலங்கையில் அதிக வருமானம் பெற்று அரசாங்கத்திற்கு அதிகளவில் வரி செலுத்தும் 100 செல்வந்தர்களை அடையாளம் காண இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரியல் எஸ்டேட், நிதிப் புலனாய்வு பிரிவு அறிக்கைகள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஒப்பந்தப் பங்காளிகளின் தகவல்கள் போன்ற மூன்றாம் தரப்பு தரவுகள் உட்பட பிற தரவு ஆதாரங்களைக் கொண்டு மதிப்பாய்வு செய்வதன் மூலம் அவர்களை அடையாளம் காணவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பாய்வுகளை தொடர்ந்தும் கண்காணிப்பதற்காக மேலும் குழுவினை விரிவுபடுத்தவும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரி நிர்வாகம்
நாட்டின் வரி நிர்வாகத்தில் நேர்மை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையர் ஜெனரல் W.A. செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது அதிக செல்வம் தனிநபர்கள் பிரிவு எனப்படும் ஒரு பிரத்யேக அலுவலகத்தை அமைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது, இது துறையில் அதிக வரிசெலுத்துபவர்கள் பத்து பேரை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிவாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இடர் மதிப்பீடு
மேலும் நாட்டிலுள்ள செல்வந்தர்கள் சரியான அளவில் வரிகளை செலுத்துவதை உறுதி செய்வதற்காக, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதிகளவான இடர் மதிப்பீடுகள் மற்றும் பணக்கார வரி செலுத்துவோரின் விவரக்குறிப்புகளை மதிப்பிடுகிறது, அதே நேரத்தில் அதிக ஆபத்துகள் உள்ள வழக்குகளில் தணிக்கைகளையும் நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, அதிக செல்வம் தனிநபர்கள் பிரிவுக்கு சாத்தியமான வரி இணக்கமின்மையைக் கண்டறிய உதவும் தகவலை அணுகுவதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |