மின்சார வாகன இறக்குமதிக்கு அனுமதி! நுகர்வோரிற்கு விழுந்தபேரிடி
Sri Lanka
Government Of Sri Lanka
vehicle imports sri lanka
By Sathangani
நாட்டிற்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியதன் காரணமாக மோட்டார் வாகனங்கள் மீதான வரி வருமானம் அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 57.1 சதவீதம் அதிகரித்து 21.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொது நிதி முகாமைத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மோட்டார் வாகனங்கள் மீதான வரி வருவாயாக 2022 முதல் ஒன்பது மாதங்களில் 13.7 பில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது.
மின்சார வாகன இறக்குமதி
அதன்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் மோட்டார் வாகனங்கள் மீதான வரி வருமானம் 21.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்