2.1 டிரில்லியனாக உயர்ந்த இலங்கையின் வரி நிலுவை : IMF வெளியிட்ட தகவல்

International Monetary Fund IMF Sri Lanka Inland Revenue Department
By Sathangani Nov 01, 2026 09:28 AM GMT
Report

கடந்த 2025 ஆம் ஆண்டில், நாட்டின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கீழ் பதிவாகியுள்ள மொத்த வரி செலுத்தத் தவறிய தொகையானது சுமார் 2.1 டிரில்லியன் ரூபாயாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புதிய தொழில்நுட்ப உதவி அறிக்கையின் மூலம் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தத் தொகையில் சுமார் 1.6 டிரில்லியன் ரூபாய் வரி மதிப்பீடுகள் தொடர்பான மேன்முறையீடுகள் அல்லது பிற சர்ச்சைகளுக்கு உட்பட்ட தொகையும் உள்ளடங்கியுள்ளது.

அமெரிக்காவிலிருக்கும் பசிலுக்கு தொடர் சிக்கல்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அமெரிக்காவிலிருக்கும் பசிலுக்கு தொடர் சிக்கல்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மிகப்பெரிய தடையாக மேன்முறையீடுகள்

இதற்கமைய, நிலுவையிலுள்ள வரிப் பணத்தை அறவீடு செய்வதில் காணப்படும் மிகப்பெரிய தடையாக மேன்முறையீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

2.1 டிரில்லியனாக உயர்ந்த இலங்கையின் வரி நிலுவை : IMF வெளியிட்ட தகவல் | Sri Lanka S Tax Arrears Rise To 2 1 Trillion Imf

கடந்த 2024 ஆம் ஆண்டில் பதிவான மொத்த வரி செலுத்தத் தவறிய தொகை சுமார் 1.1 டிரில்லியன் ரூபாயாக இருந்ததுடன், அதில் சுமார் 947 பில்லியன் ரூபாய் இவ்வாறான சர்ச்சைகளுக்கு உட்பட்டிருந்தது.

சர்ச்சைக்கு உட்படாத வரி நிலுவைகளும் கூட நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதுடன், பணியாளர் பற்றாக்குறை, சரியான முன்னுரிமை அளிக்காமை மற்றும் அறவிடக்கூடிய வரி நிலுவைகள், அறவிடப்படும் சாத்தியக்கூறு குறைவாக உள்ள அல்லது நிர்வாகச் செலவுகளுடன் ஒப்பிடுகையில் அறவிடுவது நடைமுறைக்குச் சாத்தியமற்ற வரி நிலுவைகளைப் பிரித்தறிவதற்குத் தேவையான ஆபத்து அடிப்படையிலான முறைமை இல்லாமை ஆகியவையே அதில் தாக்கம் செலுத்துகின்றது.

இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை : 8 பணிகளுக்கு TIN இலக்கம் அவசியம்

இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை : 8 பணிகளுக்கு TIN இலக்கம் அவசியம்

 

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி 

உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) சட்டத்தின் கீழ் அறவிட முடியாத வரி கடன்களை நேரடியாகத் நிராகரிப்பதற்கான அதிகாரம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு இல்லை என்பதுடன், அதற்கு நிதியமைச்சில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

அதேபோல், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள சில வரி நிலுவைகள் தொடர்பாக, அவை மேன்முறையீடுகள் அல்லது பிற சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்படாத சந்தர்ப்பங்களில் கூட, அவற்றை அறவிடுவதற்குப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது.

2.1 டிரில்லியனாக உயர்ந்த இலங்கையின் வரி நிலுவை : IMF வெளியிட்ட தகவல் | Sri Lanka S Tax Arrears Rise To 2 1 Trillion Imf

இதன் காரணமாக, வரி நிலுவைகள் இருக்கும் காலம், அவை மேன்முறையீடுகள் அல்லது பிற சர்ச்சைகளுக்கு உட்பட்டுள்ளனவா, அறவிடும் திறன் மற்றும் அறவிடுவதற்குச் செலவாகும் நிர்வாகச் செலவு என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தி, ஆபத்து அடிப்படையிலான வரி நிலுவை முகாமைத்துவ முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

இதன் மூலம் அறவிடக்கூடிய வரி நிலுவைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து, குறைந்த மதிப்பைக் கொண்ட, சர்ச்சைக்கு உட்பட்ட, அறவிடப்படும் சாத்தியக்கூறு குறைந்த அல்லது நிர்வாக ரீதியாக அறவிடுவது நடைமுறைக்குச் சாத்தியமற்ற வரி நிலுவைகளைத் தனித்தனியாக நிர்வகிக்க முடியும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 அரச நிறுவனங்களில் அதிரடி மாற்றம்: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

80 அரச நிறுவனங்களில் அதிரடி மாற்றம்: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019