எரிபொருளுக்கு மீண்டும் சிக்கல்- சபுகஸ்கந்த தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், மீள ஆரம்பிக்கும் முயற்சிகள் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அங்குள்ள கொதிகலன்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வேலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழாயில் வெடிப்பு
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள கொதிகலன்களிலுள்ள ‘டர்போ ஃபேன் ‘ குழாய்கள் வெடித்தன் காரணமாக எரிபொருள் சுத்திகரிப்பு பணிகளை ஆரம்பிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தாமதம்
நேற்று முதல் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் செயற்படத் தொடங்கும் எனவும், அதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு நீங்கி நாளாந்தம் 600 முதல் 800 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் மற்றும் விமானத்திற்கான எரிபொருளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
