விமானத்தில் அறிமுகமாகிய நபரிடம் குழந்தையை ஒப்படைத்த பெண் - வெளியானது புதிய தகவல்!
காலி உடுகம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதியவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விமானத்தில் அறிமுகமான நபரிடம் 2 வயதான மகனை கொடுத்து விட்டு தப்பிச் சென்ற குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் இன்று காலை கைது செய்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரால் கைது
காலி உடுகமை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் சவுதி அரேபியாவில் இருந்து 2 வயது பிள்ளையுடன் நாடு திரும்பிக்கொண்டிருந்த போது, அதே விமானத்தில் பயணித்த வேறு ஒரு நபர் அறிமுகமாகியுள்ளார்.
சந்தேக நபரான பெண்ணுக்கு அறிமுகமான நபர், 11 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் தொழில் புரிந்து விட்டு அன்றைய தினமே நாடு திரும்பியுள்ளார்.
இந்த நபர் களுத்துறை போதியவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர். கடந்த 25 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.
குழந்தையை ஒப்படைத்து விட்டு தப்பிச் சென்ற பெண்
இவ்வாறான நிலையில், விமானத்தில் அறிமுகமான சந்தேக நபரான பெண், சிறிலங்கா விமானநிலையத்தை வந்தடைந்ததும், களுத்துறை செல்ல வேண்டும் என விமானத்தில் அறிமுகமான நபரிடம் தெரிவித்துள்ளார்.
எனவே அப்பெண்ணையும் தனது வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
இவ்வாறான நிலையில், குழந்தைக்கு குளிர்பானம் மற்றும் இனிப்புகளை வாங்கி வருவதாகத் தெரிவித்து, தனது குழந்தையை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.
காவல்துறையில் முறைப்பாடு
எனினும் பலமணி நேரமாகியும் குறித்த பெண் திரும்பி வராததன் காரணமாக உதவி செய்த நபர் குழந்தையுடன் சென்று காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அவர் பதிவு செய்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை நடத்திய காவல்துறையினர், இன்று காலை பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
அதனையடுத்து, காவல் நிலைய பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் சுனேத் சாந்தவின் ஆலோசனைக்கு அமைய காவல்துறை குழு ஒன்று விசாரணைகளை நடத்திய போது குறித்த பெண்ணை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.