பேண்தகு அபிவிருத்தியில் ஏழு புள்ளிகளைப் பெற்ற இலங்கை : ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, 2021 பேண்தகு அபிவிருத்தி அறிக்கையின்படி இலங்கை மேலும் ஏழு புள்ளிகளைப் பெற்று, 165 நாடுகளில் 87ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டுகளைத் தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கனி விக்னராஜா (Kani Vignaraja) தெரிவித்தார்.
அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன், அரசதலைவர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
"காலநிலை மாற்றத்துக்கு நிலையான தீர்வுகளுடன் கூடிய பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான அரசதலைவர் செயலணி மற்றும் "பொருளாதாரப் புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான செயலணி உள்ளிட்ட முறையான கட்டமைப்பு ஒன்று இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதென, அரசதலைவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார பாதிப்புகள் தொடர்பில் உரையாற்றும் போது, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை அரசதலைவர் சுட்டிக்காட்டினார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா
