நாட்டில் முடக்கப்பட்டுள்ள மற்றுமொரு சமூக ஊடகம்!
sri lanka
social media ban
tiktok ban
By Thavathevan
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலைமையில் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மற்றொரு சமூக ஊடகமான டிக்டொக்(Tiktok) தற்பொழுது முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சில சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை முதல் டிக்டொக் முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட இருந்த நிலையிலேயே தற்போது இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி