இங்கிலாந்து அணிக்கு எதிரான T20 இலங்கை குழாம் அறிவிப்பு
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி இன்று (28) பிற்பகல் அறிவிக்கப்பட்டது.
இதற்காக இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு 16 வீரர்கள் கொண்ட அணியை பெயரிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மீதமுள்ள போட்டிகள்
முதல் போட்டி ஜனவரி 30 ஆம் திகதி நடைபெறும், மீதமுள்ள போட்டிகள் பெப்ரவரி 1 மற்றும் 3 ஆம் திகதிகளில் நடைபெறும்.
இலங்கை அணி
1. தசுன் ஷானக (கேப்டன்), 2. பதும் நிஸ்ஸங்க, 3. கமில் மிஷார, 4. குசல் மெண்டிஸ், 5. குசல் ஜனித் பெரேரா, 6. தனஞ்சய டி சில்வா, 7. சரித் அசலங்க, 8. ஜனித் லியனகே, 9. பவன் ரத்நாயக்க, வானந்துனி, 10. 12. மஹிஷ் தீக்ஷனா, 13. துஷ்மந்த சமீர, 14. பிரமோத் மதுஷன், 15. மதீஷ பத்திரன, 16. எஷான் மலிங்க
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |